அன்று ஒரு நாள்...
- Sivaraj Parameswaran
- Nov 23, 2023
- 4 min read
Updated: Feb 25

அன்று ஒரு நாள் நான் வழக்கம் போல் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஆலமரத்தின் அடியிலுள்ள சிமெண்ட்திண்ணையில் உட்கார்ந்து என் உண்மை கதையை பொய் கதையாக எழுதிக்கொண்டிருந்தேன்.
அப்பொழுது அந்த வழியாக தனது பறக்கும் பாயில் என் முன்னாள் காதலி மும்தாஜுடன் வந்த ஷேக் பகதூர் என்னைபார்த்து,
"ஹே பையா! திரும்பவும் காதல் கதை எழுத ஆரம்பிச்சிட்டாயா?"
என்று கேட்க, நான் மும்தாஜை பார்த்து சிரித்துக்கொண்டே,
"என்ன பண்றது உசூர் ஒரு 100 கதையாவது எழுதிட்டேன்னா அதை பப்லிஷ் பண்ணிடுலாம்னு ஒரு நப்பாசைதான்!!"
ஷேக் சிரித்துபடி,
"மாக்கி (ஹிந்தியில் அம்மாவை கெட்ட வார்த்தையால் திட்டும் வார்த்தை) நீ எழுதுறதெல்லாம் கதையா? நீஎழுதுறதுல எவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்குன்னு உனக்கு தெரியுமா? எப்ப பார்த்தாலும் மேல் சாதி, கீழ்சாதி, புராணம்ன்னு, சம உரிமைன்னு, மசுரு மாதிரி எழுத வேண்டியது!! இப்படி எழுதின்னா எவன் படிப்பான்? சரிஉன்னோட சினிமா ப்ரோஸஸ் என்ன ஆச்சு?"
என்று ஷேக் கேட்டதும், என் முகம் சுருங்கியது, கோபம் தலைக்கேறியது எனினும் எதையும் வெளிக்காட்டமுடியாமல் மெல்ல சிரித்தபடி,
"ஏதோ ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் உசூர்! இன்னும் சான்ஸ் கிடைக்கல!" என்றேன்.
இப்பொழுது கொஞ்சம் நக்கல் சிரிப்புடன் மும்தாஜ்ஜின் தோள்மீது சாய்ந்த ஷேக் சிரித்தபடி என்னை பார்த்துஹிந்தியில் ஏதோ சொன்னான்,
"तुम्हारे पिता ने तुमसे कहा था कि तुम कह रही थी कि तुम उससे शादी करोगी"
ஹிந்தியின் தமிழாக்கம் இந்த கதையை படிபவர்களுக்காக. சிவாவிற்கு இது புரியாது ஏன் என்றால் அவனுக்கு ஹிந்திதெரியாது - "நீ இவனை தான் கல்யாணம் பண்ணனும்ன்னு ஆசை பட்டேன்னு உங்க வாப்பா சொன்னாரு, இப்போபார்த்தியா இவன் எப்படி இருக்கான்னு!"
ஒன்றும் புரியாமல் நான் ஷேக்கை பார்த்து முழித்துக்கொண்டிருக்க! ஷேக் என்னை பார்த்து,
"டேய் பையா எத்தனை நாள் தான் டா இதே கதையை சொல்லிட்டிருப்பே? ஏதாவது வேலை வெட்டிக்குபோயிருந்தா கூட நீ இந்நேரம் கோடீஸ்வரனாகிருப்பே போல! இப்ப பாரு கிறுக்கனாட்டம் மரத்துக்கு கிழஉக்கார்ந்து இன்னும் எதையோ கதைன்னு கிறுக்கிக்கிட்டு இருக்க!! மாக்கி (ஹிந்தி கெட்ட வார்த்தை)"
இதை கேட்ட மும்தாஜ் என்னை ஏறெடுத்து பார்த்தாள். அவள் கண்கள் அவள் அறியாமலேயே கண்ணீரரைஅருவியாக கொட்ட ஆரம்பித்தது!! இதை கண்ட நான் எதுவும் செய்யமுடியாமல், சொல்ல முடியாமல், வெறுமனேஅவளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
இதை பார்த்துக்கொண்டிருந்த ஷேக் பகதூர் தனது பறக்கும் பாயிலிருந்து ஒரு தங்கநாணயத்தை எடுத்து,
"இந்தா, இதை வச்சுக்கோ! சோறு தண்ணிக்கு உதவும்!! இன்னும் வேண்டும்னா கேள், தரேன்! என்ன இருந்தாலும்என் மும்தாஜை காதலித்து சந்தோச படுத்துனவன் இல்லையா!!"
என்று கூறி என் முகத்தில் வீசியான். அந்த நாணயம் என் முகத்தில் பட்டு சிமெண்ட் தரையில் ட்ரிங் என்றுஉருண்டுக்கொண்டிருக்க, நான் கண்கொட்டாமல் அதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த ட்ரிங் சத்தம் என் மனதுக்குள் ஒரு சொல்லமுடியாத வலியை தூண்டியது. அந்த நொடி அவமானத்தின்உச்சியில் நின்று தூக்கில் தொங்க துடிக்கின்ற அந்த உணர்வை தந்தது. அதன் பின் அவன் கூறிய வார்த்தைகள்என்னை 1000 முறை கழுவில் ஏற்றுவது போலிருந்தது.
(கழுவேற்றம், impalement என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில்குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனைபிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகிவிடுவார்கள்)
அந்த வார்த்தைகள் - "ரெண்டு நாள் தான் பையா அதுக்கப்புறம் எனக்கு மும்தாஜ் மீதுள்ள ஆசை போய்விடும், அப்புறம் இவளை 2000 பொற்காசுக்கு முற்சந்தில ஏலம் விடலாம்ன்னு இருக்கேன். வேணுமுன்னா நீ வந்துவாங்கிக்கிறியா? ஐயோ அதுக்கு காசு வேணுமே? உன்கிட்ட தான் ஒத்த ரூவா கூட இல்லையே! என்ன பண்ணுவே? பரவாயில்லை பின் எப்பயாவது காசு வரும்ல அப்போ நீ காசு கொடுத்து இவள் கூட புணர்த்துக்கலாம்!! என்ன பையாசரியா!!"
என்று ஒரு தெய்வீக சிரிப்போடு கூறி என்னை பர்த்து எல்லி நகையாடினான்!!
என் இயலாமையின் நிலையிலும் ஒரு சொட்டு கண்ணீர் கூட எனக்கு வரவில்லை வற்றிவிட்டது போலும். என்இயலாமையை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த மும்தாஜ்க்கு முதல் முறை கோபம் வந்தது. அவள், ஷேக்கை அன்போடு அழைத்து,
"ஹபிபுல்லா போதும் வாருங்கள் செல்லலாம், இனி இந்த சவத்திடம் நின்று நமது சமயத்தை வீணடிக்க வேண்டாம்! நான் உங்கள் அடிமை உங்களின் கட்டளைகளுக்கு இணங்கி நீங்கள் கூறுவதை நான் கடவுளின் பெயரால்செய்வேன்! என் கடைசி ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு என் உயிருள்ள வரை நான் விசுவாசமாக இருப்பேன்"
என்று அவள் கர்ஜிக்க, எதுவும் புரியாமல் நான் அவர்களை பார்த்து விழித்துக்கொண்டிருந்தேன்.
ஷேக் என்னை பார்த்து,
"போஸடிக்கே (மறுபடியும் ஹிந்தி கெட்ட வார்த்தை - எதை குறிப்பது என்று கூகிள் செய்து பார்க்கவும்) என்னமுழிக்கிறாய்? அவள் உன்னை கடைசியாக ஒரு முறையாவது பார்த்து விடவேண்டும் என்று கூறியதால் அவளைசந்திரனிலிருந்து உன்னை காண அழைத்து வந்தேன்! உன்னை வெறுப்பேற்றும்படி அவள் கூறியதால் அவ்வாறுசெய்தேனடா மடையா!! மும்தாஜ் எனக்கு கடவுள் தந்த வரம் அவளை இப்படி பேசியதற்கே கடவுள் என்னைமன்னிப்பாரா? தெரியவில்லை! இருந்தும் அவள் கேட்டதற்கிணங்க நான் செய்தேன்!! கடவுளே மன்னிப்பாயாக!!"
ஷேக் மும்தாஜை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டபடி என்னை பார்த்து,
"உன்னை வெறுப்பேற்ற அவள் சொன்ன தந்திரம் பலிக்குமா என்று பார்த்தேன்!! பலிக்கவில்லை!! என்னஜென்மமடா நீ? புணர்ச்சி மட்டும் வைத்து உணர்ச்சி இல்லாமல் அவளை காதலித்தாய் போலும்! சீ நீ மனிதனாஇல்லை மிருகமா? உன்னோடு புணர்ந்த காலத்தை பழுத்த காய்ச்சிய இரும்பு உருவம் கொண்ட ஆணோடுபுணர்ந்தாக எண்ணுகின்றாள் மும்தாஜ்"
என்று அவன் சொல்லிமுடிக்க மும்தாஜ் ஷேக்கின் கையை பிடித்துக்கொண்டு,
"ஹபிபுல்லா போதும் வாருங்கள் செல்லலாம்!! இனி இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை"
என்று அவள் என்னை பார்த்து சொல்ல, ஷேக் என்னை ஏளனமாக பார்த்து பறக்கும் பாயிடம் சைகை செய்ய அதுநிலவை நோக்கி வேகமாக பறந்து செல்கின்றது.
நான் அவர்கள் சென்ற திசையை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க, என் அருகே நின்று கொண்டிருந்தஆலமரம் என்னை பார்த்து கேட்டது,
"ஏன்டாப்பா நீ ஏன் ஒரு வார்த்தை கூட பேசல? ஏன் உனக்கு அந்த பொண்ணை புடிக்காதா என்ன?"
அதற்கு நான் சிரித்துக்கொண்டே,
"ஆலமரமே எனக்கு மும்தாஜை ரொம்ப புடிக்கும் அதுக்குன்னு கல்யாணம் பண்ணிக்க சொன்னா என் பொண்டாட்டிஎன்ன செருப்பால அடிக்கமாட்டாளா!!"
ஆலமரம் குழம்பிக்கொண்டு,
"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? சரி!! அப்போ அவன் சொன்னதுபோல உனக்கு உணர்ச்சியே இல்லையா?"
நான் விரக்தி சிரிப்போடு,
"ஆலமரமே உணர்ச்சி இல்லாமலா புணர்ச்சி வரும்!! நான் அவளை காதலித்தேன்! உண்மையாக காதலித்தேன்! ஆனால் அவள் உன்னை போல ஒரு கற்பனை கதாபாத்திரம் தானே? அவளோட எப்படி நான் குடும்பம் நடத்துவது? அவளை எப்படி காதலிப்பது கொஞ்சம் யோசித்துப்பார்?"
குழம்பிப்போன ஆலமரம்,
"அப்போ நான் ஒரு கற்பனை கதாபாத்திரமா??"
என்று ஆலமரம் சொல்ல முடிக்க பலத்த சூறாவளி காற்று அடிக்க தொடங்கியது, வானத்திலிருந்து ஒரு குரல்
"ஷிவ் ஷிவ் ஷிவ் மணி ஏழாயி, இன்னு ப்ரோடியூஸர கானான் போன்டெய்!!"
தமிழாக்கம் - “ஷிவ் ஷிவ் ஷிவ் மணி ஏழாச்சு, இன்னைக்கு ப்ரோடியூஸர பார்க்க போணும்ல எழுந்திரி"
என்று குரல் சொல்லிமுடிக்க, ஆலமரம் சிமெண்ட் தரையிலிருந்து வேரோடு பிடுங்கப்பட, சிமெண்ட் தரை தூள் தூள்ஆக்கப்பட, வானம் பிளந்து மேகம் கருத்து சூறாவளி காற்று வீச, அந்த இடத்தை வேரோடு வேராக பிளந்து வெடித்துசிதற, தூக்கம் கலைந்து தூக்கத்திலிருந்து எழுகின்றான் ஷிவ்...
..எழுந்த பின் ஷிவ்வின் மனைவியும் ஷிவ்வும் மலையாளத்தில் பேசியதின் தமிழாக்கம்..
ஷிவ்வின் மனைவி : என்ன மூஞ்செல்லாம் வேர்த்திருக்கு? கனவா?
ஷிவ் : ஆமாம் கெட்ட கனவு!!
ஷிவ்வின் மனைவி : என்ன கனவு கண்டே!!
ஷிவ் : சூறாவளி! ஆலமரம்! ஷேக்! பாயி!!
ஷிவ்வின் மனைவி : என்னடா உளறுறே!!
ஷிவ் : ....!!!
“ஆம் ஷிவ் சொல்வது உண்மை தான். அவன் தூங்கி எழுந்த பின் அவனுக்கு எதுவும் ஞாபகம் இல்லை. இந்தகதையை கூட அவன் தூங்கிகொண்டிருக்கும் பொழுது நான் தான் எழுதினேன்…”
இப்படிக்கு,
நான்
சிவராஜ் பரமேஸ்வரன்x
Nalla karpanai valam. But it was good. Try to improve more
நல்லவிதமான "கெட்ட" (வார்த்தை) கனவு!! 😀
ஆலமரம் வேருடன் பிடுங்கி, புயல் காற்றால் மாயாமாவது .. மிக குறுகிய நேர CG effect- போல இருந்துச்சு! 🙂
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. moments!!❤️
தமிழ், ஹிந்தி, மலையாளம், "Paandiyaa" பதிவா? 🤔👌🏽